Malartv
Malartv

போட்டியில் பங்குபெற

பதிவு பாரம்

திரையிசை கண்ட இலக்கியம்

அறிமுகம்

தமிழ் இலக்கியங்களின் செழுமைகளும் சிறப்புகளும் தமிழ்த்திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இளம் தலைமுறைக்குத் தமிழ் செய்யுள்களை அடையாளம் கண்டு திரைப்பாடல்களுடன் தொடர்புப்படுத்தி பேசும் ஒரு போட்டியாக இப்போட்டி நடத்தப்படுகிறது. இளம் தலைமுறையினருடன் அனைத்து தரப்பினர்களும் பயன்பெறும் வகையில் இப்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது.


சங்கக் காலத்து தமிழ் இலக்கியச் செய்யுள்களைப் பல பாடலாசிரியர்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியானப் பாடல்களை நம் சமூகம் அடையாளம் கண்டு அங்கீகரிக்க இப்போட்டி பயனாக அமையும். 

பங்கேற்கும் போட்டியாளர்கள் முதல் சுற்றில் சுயமாகப் பாடலையும் செய்யுளையும் தேர்வு செய்து காணொலியாகப் பதிவுச் செய்து வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக அனுப்பி வைத்த பின்னர் நடுவர்களால் தேர்வு செய்யப்படும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்பர். இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் 10 போட்டியாளர்களுக்கு விளக்கப்பட்டறையுடன் பயிற்சியும் வழங்கப்படும்.

நோக்கம் / இலக்கு

  •  சங்கக் காலத்து தமிழ் இலக்கியச் செய்யுள்களைத் தேடி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுதல்
  • வெற்றியாளர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து, இலக்கிய மேடைகளில் தொடர்ந்து இலக்கியம் குறித்து பேச வாய்ப்பளித்தல்
  • திரைப்படப் பாடல்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைப் பயிற்சி அளித்தல். 

போட்டி வரைவு

  1. சங்க இலக்கியச் செய்யுள்கள் தற்கால வாழ்வியலுக்கு ஏற்ப திரைப்பாடல்களில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதைக் கவரும் வகையில் பேசியும் இயன்றால் பாடியும் காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.
  2. எந்தவொரு தமிழ்ச் சங்க இலக்கியச் செய்யுளையும் போட்டிக்குப் பயன்படுத்தலாம். 
  3. தமிழர் வாழ்வியல்,திரையிசை போன்றவற்றுடன் பொருத்தி செய்யுளின் பாடுபொருள்,உவமை ஆகியவற்றைத் தொடர்பு படுத்திய படைப்பாக இருத்தல் அவசியம்.
  4. காணொலியில் எந்தவொரு பின்னணி இசையும் பின்னணிக் காட்சியும் இருத்தல் கூடாது.

பரிசு விவரங்கள்

  மாணவர் பிரிவு 

  • முதல் நிலை : RM 5,000 + தங்கப்பதக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • இரண்டாம் நிலை : RM 3,000 + தங்கப்பதக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • மூன்றாம் நிலை : RM 1,500 + தங்கப்பதக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • 4 முதல் 10-ஆம் நிலை வரை : தலா RM500.00 ரொக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • முதல் நிலை வெற்றியாளருக்கு அதிரடியான சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது.
  • போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இறுதிச் சுற்றுடன் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும்.

  

பொதுப் பிரிவு

  • முதல் நிலை : RM 5,000 + தங்கப்பதக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • இரண்டாம் நிலை : RM 3,000 + தங்கப்பதக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • மூன்றாம் நிலை : RM 1,500 + தங்கப்பதக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • 4 முதல் 10-ஆம் நிலை வரை : தலா RM500.00 ரொக்கம் + கோப்பை + சான்றிதழ்
  • முதல் நிலை வெற்றியாளருக்கு அதிரடியான சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது.
  • பங்கேற்கும் அனைவருக்கும் இறுதிச் சுற்றுடன் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும். 

விளக்க காணொளி

மாதிரி காணொளி

போட்டி விபர காணொளி

விதிமுறைகள்

Download PDF

Contact Us

MalarTV Online

Malar Tv Media 5, Jalan Seruling 58, Taman Klang Jaya, 41200 Klang, Selangor

0122443010, 0129245484

Hours

Open today

09:00 am – 05:00 pm

Drop us a line!

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Cancel

Copyright © 2026 MalarTV Online - All Rights Reserved.

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept